கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்

ஜூன் 30


சில வாரங்களுக்கு முன் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா?

ஈரான் தேசத்தில் இந்த யூசுப்பை போலவும், மற்றும் வெளியே தெரியாமல் இரகசிய கிறிஸ்தவர்களாக, அல்லது அரசாங்கத்தால் கிறிஸ்தவர்கள் என்னும் பேரினிமித்தம் பாடுபடும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் ஜெபங்களினால் கிறிஸ்துவுக்காக எழும்ப போகிற அநேக வாலிபர்களை என்ன செய்வது என்று ஈரான் அரசு திகைக்கும் காலம் கர்த்தரை மறுதலிக்கிற அந்த தேசத்தில் நிச்சயம் வரப்போகிறது. 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்' என்ற கர்த்தரின் வார்த்தைகள் அந்த தேசத்தில் நிறைவேறும்படியாக ஜெபிப்போம்.

No comments: