விசுவாசத்தின் “தொடுதல்”

விசுவாசத்தின் "தொடுதல்"

"இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்." (லூக்கா 8:45)

லூக்கா 8:43-48 ல், பன்னிரண்டு வருடங்களாக, இரத்தப் பெரும்பாடுள்ளவளாயிருந்து பாடுபட்ட ஒரு பெண்ணின் கதையைப் பார்க்கிறோம். அவள் கூட்டத்தின் மத்தியில் இயேசுவிடம் நெருங்கி வந்து அவரைத் தொட்டாள். அவள் தனக்குள் கூறிக்கொண்டதாவது, "நான் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டால், முற்றிலும் சுகமாகி விடுவேன்" அதன்படி, அவள் முன்பாக வந்து, இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அப்போது அவள் உடனடியாக சுகமானாள். இது ஒரு சாதாரண தொடுதல் அல்ல. அது விசுவாசத்தின் தொடுதலாகும். காரணம், கர்த்தர் அதற்குரிய உணர்த்தலைக் காண்பித்தார். 

மக்கள் கூட்டத்தின் நடுவே, "என்னைத் தொட்டது யார்?" என்றார். சீஷர்களைப் பொருத்தவரை இது ஒரு அடையாளமாக இருந்ததினால், "ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்." (லூக்கா 8:45). இல்லை. விசுவாசத்தின் தொடுதலை தேவன் அறியாதவரல்ல. எஜமானனோ பதிலாக கூறுவதாவது, "என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவா; என்னைத் தொட்டதுண்டு." (லூக்கா 8:46). 

தான் ஒரு அற்புதத்தைப் பெற்றுக்கொண்டதை அந்தப் பெண் உணர்ந்தவளாக, எஜமானின் கால்களுக்கு முன்பாக விழுந்து, அவரைத் தொட்டதின் காரணத்தை அவள் பகிர்ந்துகொண்டாள். அவளது விசுவாசத்தைப் பாராட்டி, இயேசு கூறுகின்றார், "...மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ" (லூக்கா 8:48). 

எஜமானன் அவளது விசுவாசத் தொடுதலை அறிந்து கொண்டார். அது அவளது சுகத்துடனும் பரிபூரண குணமாக்குதலுடனும் தொடர்புபட்டிருந்தது.  அதேவிதமாக, இன்றும் நீங்கள் இயேசுவைத் தொட முடியும். ஒரு அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறு இன்று அவரைத் தொடுகின்றீர்கள்? வசனத்திற்கூடாகவே. வசனத்தோடு உங்களுடைய ஆவி தொடர்புபட வேண்டும். 

தேவனுடைய வார்த்தையானது உங்களைத் தொடுமாயின், அது இயேசு உங்களைத் தொடுவதற்கு மிக பொருத்தமாயிருக்கும். அந்தத் தொடுதல் புலன்களுக்கு அப்பாற்பட்டது. அது உங்கள் ஆவிக்குள்ளானது. வேதாகமம் கூறகின்றபடி, நீதியுண்டா இருதயத்திலே - ஆவியிலே விசுவாசிக்கப்படும் (ரோமர் 10:10) உங்கள் ஆவியிலே விசுவாசியுங்கள்.

நீங்கள் தேவனுடைய வசனத்தை விசுவாசித்தால், உங்கள் விசுவாசத்தின்படி பதிலளித்தால், அதுவே உங்கள் ஆவியின் தொடுதலாயிருக்கும். அந்த தருணத்தில், தேவனுடைய வல்லமையோடு நீங்கள் தொடர்புபடுவீர்கள். உங்கள் ஆவிக்குள் அதை விசுவாசிக்கும்போது மாத்திரமே அந்த வல்லமை கிரியை நடப்பிக்கும். அதற்கேற்றபடி கிரியை செய்யும். அதுதான் விசுவாசம். அதுவே தேவனுடைய வார்த்தைக்கான மனித ஆவியின் பிரதியுத்தரமாகும். இன்றே வசனம் உங்களைத் தொடுவதாக. நீங்கள் எதிர்பார்க்கின்ற அற்புதத்தை உங்கள் ஆவிக்குள் பெற்றுக்கொள்ளும்படியான தேவையான விசுவாசத்தை இன்றே சுவீகரித்துக் கொள்ளுங்கள்.

No comments: