வைரம்

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும் விலைலேயறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்,இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள். - (1பேதுரு2:5).

விலையுயர்ந்த கற்கள் எப்போதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு
வைக்கப்படும். அதனை அடைவதற்காக யுத்தங்களும் புராதன காலங்களிலே நடந்ததுண்டு. ஒருசில மன்னர்கள் தங்கள் மனைவிக்கு வைரத்தினாலான மோதிரங்களை அன்பின் பரிசாக அளித்ததுமுண்டு. எவ்வாறாயினும் வைரம் எப்போதுமே மதிப்பு மிக்கதே.

தேவன் கிறிஸ்துவையும், நம்மையும் விலையேறப்பெற்ற ஜீவனுள்ள கல்லாகவே காண்கிறார். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும் என்று வசனம் நமக்கு கூறுகிறது

உலகம் முழுதும் விலையேறப்பெற்ற கல் என்று போற்றப்பட்ட நம்பிக்கையின் வைரம் அதை உடையவர்களுக்கு நம்பிக்கையை சிறிதேனும் தரவில்லை. மாறாக, ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒருவரும் தங்கள் ஜீவைன இழக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஜீவனைத் தரவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார். அவரைப் பற்றி கொண்ட நாமும், நாம் இருக்கும் இடங்களில் ஜீவனுள்ள விலையேறப்பெற்ற கல்லாகவே விளங்கவேண்டும். 

விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவை விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல்
இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று' (வசனம் 7). 

நமக்கு விலையேறப்பெற்றதாயிருக்கிற அந்த கல்தானே, விசுவாசியாதவர்களுக்கு இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மைலயுமாயிற்று. ஆகவே விலையேறப்பெற்ற கல்லாகிய கிறிஸ்துவும், அவரை விசுவாசிக்கிற நாமும் அவரில் ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும்
கட்டப்பட்டுவருகிறோமா என்பதைச் சிந்திப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.


No comments: