வைபவங்களில் ''கொஞ்சம் குடிக்கலாமா? ''

ப: மதுவைக் குறித்த ஒருசில வசனங்களோடு துவங்குகிறேன். ''திராட்சைரசம் பரியாசம் பண்ணும். மதுபானம் அமளிபண்ணும். அதனால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல"(நீதி.20:1) ''துன்மார்க்கத்திற்கு ஏதுவான வெறி கொள்ளாமல்"(எபே.5:14) ''மதுபானம் இரத்தவருணமா யிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது நீ அதைப் பாராதே. அது மெதுவாய் இறங்கும். முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும். விரியனைப் போல் தீண்டும்" (நீதி 23:31,32). சில நாடுகளில் சாதாரண உணவு வகைகளோடு மதுவும் பரிமாறப்படு வது உண்மைதான். ஆனால் அது எங்கே போய் முடிந்துள்ளது என்றும் நமக்குத் தெரியும். ஏதோ ஒரு சிலவேளைகளில் குடித்ததே அநேகரை குடிக்கு அடிமையாக்கிவிட்டது.

இதோ பவுலின் கோட்பாடு: ''எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக் காது. ..நான் ஒன்றிற்கும் அடிமைப்பட மாட்டேன்" (1கொரி 6:12. 10:23). பொல்லாங்காய்த் தோன்றுபவற்றை நாம் அகற்றிவிடவேண்டும் (1தெச.5:22). ஆபத்தான துவக்கங்களுக்கு எச்சரிக்கை! முதலில் வெறுமனே அங்கு 'நடப்போம், பின்பு அங்கு நிற்போம்" முடிவில் அங்கேயே ''உட்கார்ந்துவிடுவோம்" (சங்.1:1). நாம் தீமோத்தேயுவை போலிருக்கவேண்டும். அவன் திராட்சரசத்தை அறவே அகற்றினபடியால் அல்லவா பலவீனத்திற்காகச் சற்று திராட்சரசம் சேர்த்துக்கொள்ளும்படி பவுல் எழுதவேண்டியதாயிருந்தது (1தீமோ5:23).

ஏதோ ஒருசிலவேளைகளில் சிகரட் குடிக்கலாமா என்றும் கேள்வி எழலாம். அதற்கும் பதில் அதேதான். புகைப்பதும் குடிப்பதும் நம்மையும் பிறரை யும் பாதிக்கும். அவையிரண்டும் சமூக, ஆன்மீகத் தீங்குகளாம். அவைகளை நெருங்காதீர்கள்.!

நன்றி : சத்தியவசனம் சஞ்சிகை.

1 comment:

ஜீவன் said...

உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள்.உங்களுக்கான ஒரு வசனம் தரப்படும்.