நித்திய வாழ்வு


தேவன் நித்திய வாழ்வை தந்துள்ளார். அவ்வுணர்வை கொண்டிருங்கள்!

 “தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்” (1யோவான் 5:11).

 நித்திய வாழ்க்கையானது தேவனால் வாக்களிக்கப்பட்டதல்ல. அது முன்னோக்கிபார்த்து அவர் எமக்குள் வாழும் இனிய வாழ்வை பூரணப்படுத்துவதானது. அதாவது அவர் அதனை முற்றிலும் இலவசமாக தர ஆயத்தமாக இருக்கின்றார். வேதாகமம் கூறுகின்றது ‘பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.’ (ரோமர் 6:23). இந்த வரமானது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்ற ஒன்றாகும். ‘தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்’ (யோவான் 3:16).

 நித்திய வாழ்வானது முடிவற்ற வாழ்வு என்று அர்த்தமல்ல. அது அதையும் தாண்டியது. உண்மையில் நித்திய வாழ்வானது தேவனுடைய இயற்கையான சுபாவத்தை கொண்ட வாழ்வாக இருக்கின்றது. அது சரியாக தேவன் வாழும் வாழ்வாக அப்படியே பிரதிபலிக்கின்றது. அவ்வாறான வாழ்வையே இயேசு இவ்வுலகத்திற்குள் கொண்டுவந்தார். அவர் ஜீவனை பூரணப்படுத்தவே இங்கு வந்தார். (யோவான் 10:10). தேவனால் மறுருபமாக்கப்பட்ட மகிமையான வாழ்வையே இயேசு கொண்டுவந்தார். நீங்கள் அவரை விசுவாசித்தால், உங்கள் ஆவிக்குள்ளாக அதையே நீங்கள் பெற்றுக்கொள்கின்றீர்கள்.

 தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வாழ்வானது உங்கள் சரீரத்தில் உணரக்கூடியதல்ல. காரணம் நித்திய வாழ்வானது உங்கள் ஆவிக்குள்ளாக காணப்படுகின்றது. சரீரத்திற்குள் அல்ல. எனினும் அது சரீரத்தையும் தாக்கக்கூடியது. முதலில் உங்கள் சரீரத்தில் அதை உணராவிட்டாலும்கூட நீங்கள் நித்திய வாழ்வினை கொண்டுள்ளீர்கள். அது உங்கள் ஆவிக்குள்ளே காணப்படுகின்றது. ஆகவேதான் அப்போஸ்தலனாகிய யோவான் திருச்சபைக்கு எழுதும்போது, தன்னுடைய இவ்வுலக ஊழியத்தை முடித்துக்கொண்டு தேவனுடைய பிள்ளையாக நித்திய நிரந்தரமாக சதாகாலம் வாழ்வதைக் குறித்து எழுதுகின்றார். “தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்” (1யோவான் 5:13).

 உங்கள் மனநிலையின் நபத்துவமானது, உங்கள் வாழ்வுமுறை சார்ந்த அடையாள உரிமையைப் பெற்றதாக இருக்கின்றது. அது நீங்கள் எடுக்கின்ற தீர்மானத்தில், உங்களுக்கு நேரிடுகின்ற காரியங்களில், உங்களைச் சுற்றிலும் செல்வாக்கைச் செலுத்துகின்றது. ஆகவேதான் நான் தேவனுடைய தெய்வீக வாழ்வை உங்களுக்குள் கொண்டிருங்கள் என்று வாதிடுகின்றேன். நீங்கள் நித்திய ஜீவனை பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்றே தேவன் வாஞ்சிக்கின்றார். ஆகவே நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நீங்கள் யார் என்றும் உங்களிடம் என்ன இருக்கின்றது என்ன என்றும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகின்றார்.

 உங்களிடமுள்ள வாழ்வானது அற்புதமான வாழ்வாகும்! அது மாசடையக் கூடாதது. அது வியாதியினால், நோயினால், தோல்வியினால், மரணத்தினால், பிசாசினால் தாக்கப்பட்டு, மாசடையக் கூடாதது. நீங்கள் உணர்வுள்ளவர்களாக வாழும்போது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான சக்திகள் செல்வாக்கு செலுத்த முடியாது.

No comments: